Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இயக்குநர் ஹந்துங்கம மீது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு;அக்ஷரய திரைப்படம் திரையிட தடை .

13.11.2008.

பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக ஹந்துங்கமவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அசோக ஹந்துங்கம இயக்கிய “”அக்ஷரய’ எனும் படத்தில் சிறுவன் ஒருவனை நிர்வாணமாக வைத்துப் படமெடுத்தமை தொடர்பாகவே இவருக்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றில் சுமத்தப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹந்துங்கமவுக்கு எதிரான குற்றப் பத்திரிகை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.

இதில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் களுத்துறை பகுதியில் சிறுவன் ஒருவனை நிர்வாணமாக வைத்து படமெடுத்தமை, கூலி அடிப்படையில் சிறுவனை நடிக்க அமர்த்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

இதேநேரம, இது தொடர்பாக இயக்குநர் ஹந்துங்கமவை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனையும் வழங்கியுள்ளது.

இதேநேரம், அக்ஷரய திரைப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Exit mobile version