நேபாளத்தில் பிரசண்டா, பாபுராம் பட்டாராய் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரவர்க்க சார்பு ஒன்றிணைந்த கொம்யூனிஸ்ட் கட்சியில் இன்ருந்து பிரிந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் (Communist Party of Nepal, Maoist) என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். நேபாள உழைக்கும் மக்கள் தலைமையில் நடைபெற்ற ஜனநாயகப் புரட்சியை அதிகார வர்க்கத்தின் கைகளில் ஒப்படைத்த பிரசண்டா தலைமையிலான குழுவினர் போராட்டத்தின் போது உருவாக்கிய சமூக, வெகுஜன அமைப்புக்களைச் சிதைத்து வருகின்றனர். இன்று திங்கள் – 18.06.2012- உருவான இந்தப் புதிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் இன் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில் வெற்றிபெற்ற ஜனநாயகப் புரட்சியை அடுத்த நிலைக்கு நகர்த்தும் பணிகளை தாம் ஆரம்பித்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.