Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று தமிழீழ சுதந்திர சாசனம் : பிழைப்பு வாதிகளின் ஒன்றுகூடல்

tamileelamகடந்த 30 வருட காலத்தில் மக்களின் அவலத்தைப் பயன்படுத்தில் புலம்பெயர் நாடுகளிலிருந்து பிழைப்பு நடத்திய புலி சார்பு மற்றும் புலி எதிர்ப்புப் பிழைப்பு வாதிகள் தம்மைப் புதுப்பித்துக்கொள்வதற்கான புதிய வியாபார தந்திரங்களை அறிமுகப்படுத்துகொன்றனர். ஒரு புறத்தில் பேரினவாதத்தை நிராகரிக்கும் புலி எதிர்ப்புக் கும்பல்கள் சம உரிமை என்ற பெயரில் தன்னார்வ அமைப்புக்களை உருவாக்கி வருகின்றனர். இந்த வகையில் இன்று தமிழ் ஈழ சுதந்திர சாசனத்தை உருவாக்குவது என்ற கேலிக்கூத்து ஒன்றுகூடலை சில புலி சார், கே.பி இன் அடியாட்களும் இனவாத ஆதரவாளர்களும் ஒழுங்கு செய்துள்ளனர். கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைக்கும் இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டு மக்கள் மத்தியிலிருந்து புதிய அரசியல் முன்வைக்கப்பட வேண்டும்.
தமிழீழ சாசனம் குறித்த் உரையாடல் ஒன்று:-
(இந்தக் கோமாளிகள் உலக நாடுகளுக்கு தமிழீழம் எவ்வாறு அமைய வேண்டும் என்று எழுதிக்கொடுத்தால் மட்டுமே அவர்கள் தமிழீழத்தைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள். 🙂

Exit mobile version