01.01.2009.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் உள்ள 10 உறுப்பினர்கள் ஐ.நா பொதுச்சபை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவர்.
அந்த வகையில், தற்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக உள்ள தென்ஆப்ரிக்கா, இந்தோனேஷியா, பெல்ஜியம், இத்தாலி, பனாமா ஆகிய நாடுகள் தங்கள் உறுப்பினர் அந்தஸ்தை நிறைவு செய்கின்றன.
இதன் காரணமாக காலியாக உள்ள அந்த 5 உறுப்பினர் இடங்களை நிரப்பும் வகையில் ஜப்பான், மெக்ஸிகோ, உகாண்டா, ஆஸ்ட்ரியா, துருக்கி ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று இணைகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், லிபியா, வியட்நாம், கோஸ்டா ரிகா, குரேஷியா, புர்கினா ஃபஸோ ஆகிய 5 நாடுகள் மற்றும் இன்று இணைய உள்ள 5 புதிய நாடுகள் என மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.