பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில், கர்நாடகத் தமிழர் இயக்கம் சார்பில் நேற்று(18ந் தேதி) நடைபெற்ற ஒருங்கிணைந்த தமிழ் தேசிய இன விடுதலை எழுச்சி மாநாட்டில், இது குறித்து அவர் பேசுகையில்,”உலகத் தமிழர்களின் வரலாற்றில் இது மிகவும் சோதனைக்காலம். தமிழன் என்ற அடையாளமே தெரியாமல் தமிழர்களை அழிக்கும் பணியில் இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த நாடுகள் சேர்ந்து இலங்கைப் போரில் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய உதவின. இதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன.எந்த ஒரு இனத்தையும் வல்லரசு நாடுகள் ஒடுக்கியதாக வரலாறு கிடையாது. பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் படைக்கு எதிரான போரில் வியட்நாமும், வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றதைப் போல ஈழத்தமிழினமும் வெற்றிபெறும்.இலங்கையில் நடந்து முடிந்த போர்,உலகத் தமிழர் விடுதலைக்கான முதல் கட்ட போராட்டமாகும். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி மலேசியா நாட்டுக்கோ தமிழ்நாட்டுக்கோ பிற மாநிலத் தமிழர்களுக்கோ நேரலாம்.இனியும் எந்த ஒரு நாட்டின் உதவிக்காகவும் காத்திருக்காமல், ஏமாறாமல் உலகிலுள்ள 10 கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உலகத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி வெற்றிகாண வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டார்.