Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று;ஈழத்து மக்கள் இலக்கிய முன்னோடியும் சிந்தனையாளருமான பேராசிரியர் க.கைலாசபதி பவள விழா!

06.12.2008.

ஈழத்து மக்கள் இலக்கிய முன்னோடியும் சிந்தனையாளருமான பேராசிரியர் க.கைலாசபதி பவள விழாவையும் 26 ஆவது நினைவு தினத்தையும் முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  இன்று சனிக்கிழமை தேசிய கலை, இலக்கிய பேரவை ஆய்வரங்கு, கவியரங்கு மற்றும் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

ஆய்வரங்கு முதலாவது அமர்வுகாலை இன்று 9 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரை சட்டத்தரணி இ.தம்பையா தலைமையில் நடைபெறும். நவீன தமிழ் இலக்கிய அடிப்படைகளும் கைலாசபதியும் என்ற தொனிப்பொருளில் ஜெ.சற்குருநாதன் ஆய்வுரை நிகழ்த்துவார். கருத்துரைகள்: ஏ. இக்பால், ராஜிசடகோபன் கைலாசபதியின் பொதுவுடமைச் சிந்தனைகள் என்ற தொனிப்பொருளில் சி.கா.செந்திவேல் ஆய்வுரை நிகழ்த்த, மேமன் கவியும் கு.சோமஸ் கந்தமுர்த்தியும் கருத்துரை வழங்குவர்.

“கைலாசபதியும் தேசிய கலை இலக்கியமும்’ என்ற தொனிப்பொருளில் ம.மிதுன்ராகுல் ஆய்வுரை வழங்க, கருத்துரைகள்: பர்வதாமணி வன்னியகுலம், எஸ்.சற்குணராஜா, கைலாசபதியும் தமிழ்த் தேசியமும் என்ற தொனிப்பொருளில் ஆய்வுரை: தெ.ஞா.மீனிலங்கோ கருத்துரைகள்: சதாசிவம் பாஸ்கரன், சி.இதயராஜா.

கைலாசபதி: ஆள்அமைப்பு ஆளுமை: ஆய்வுரைசி.சிவசேகரம், கருத்துரைகள்: அ.க.தெய்வேந்திரன், வே.தருமலிங்கம். ஆய்வுரை; மௌ.மதுவர்மன் (கைலாசபதி நோக்கில் சமயமும் சமூகமும்), கருத்துரைகள்: மடுளுசிரியே விஜேரட்ன, பவானி முகுந்தன்.

இரண்டாவது அமர்வு பிற்பகல் 2 மணிதொடக்கம் மாலை 6 மணிவரை சி.சிவசேகரம் தலைமையில் நடைபெறும்.

ஆய்வுரை; சோ. தேவராஜா (கைலாசபதி நோக்கில் காதலும் மணவாழ்வு), கருத்துரைகள்; மு.மயூரன், ப.பவித்ரா, ஆய்வுரை: இ.தம்பையா (கைலாசபதியும் பெண்விடுதலையும்), கருத்துரைகள்: ந.காண்டீபன், எம்.தேவகௌரி, ஆய்வுரை: வ.சரண்யா (கைலாசபதியின் திறனாய்வு கொள்கை), கருத்துரைகள்: சி.வன்னியகுலம், செ.சக்திகரன். ஆய்வுரை: ச.சுதாகரன் (கைலாசபதியின் பார்வையில் பாரதி), கருத்துரைகள்: வானதி காண்டீபன், எழில் மொழி, இராஜகுலேந்திரா, ஆய்வுரை: ந.இரவீந்திரன் (கைலாசபதி; கல்வி பற்றிய நோக்கு), கருத்துரைகள்: எஸ்.சந்திரபோஸ், சுகந்தி இராஜகுலேந்திரா, ஆய்வுரை: திக்வெல்லை கமால் (கைலாசபதி நோக்கில் நாவல் இலக்கியம்), கருத்துரைகள்: ஜி. இராஜகுலேந்திரா, பவானி சிவகுமாரன்.

மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை “அடியும் முடியும்’ என்ற தொனிப்பொருளில் கவியரங்கு. பங்குபற்றுவோர் மௌ. மதுவர்மன், எஸ்.சுதாகர், தெ.ஞா.மீனிலங்கோ, ஜீ. இராஜகுலேந்திரா, சோ.தேவராஜா, நடராஜா காண்டீபன்.

தனிப்பாடல்; கலாக்ஷ்மி தேவராஜா, தனியாள் அரங்க ஆற்றுகை: சதா பாஸ்கரி வழங்கும் “எனக்குள்ளே’ .

 

Exit mobile version