Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்னொரு அழிப்பிற்கு ஐ.தே.க தயாராகிறதா?

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக பிரித்தானியாவில் வாழும் இலங்கையின் இளம் தலைமுறையினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு பிரித்தானியா சென்றுள்ளது.
இந்த நிலையில், போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமது கட்சி ஆதரவு வழங்காது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த்தவருடம் பிரித்தானியாவிற்கு வந்த இதே குழுவினர் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் குறிப்பான வேலைத்திட்டம் எதனையும் முன்வைக்காத நிலையில் பேரினவாதம் தீ மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் தோல்வி குறித்த அறிக்கையில் சிங்கள பெளத்தர்களின் ஆதரவை இழந்தமையே தோல்விக்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
ஹரின் பெர்ணான்டோ இன் திடீர் மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சி பேரினவாதத்தை மீண்டும் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப அறிகுறி.

Exit mobile version