கந்தசாமி கமலேந்திரனுக்கு ஒரு உண்மை தெரிந்திருக்க வேண்டும். இது பனிப்போரா இல்லை சூரன் போரா என யார் துயரடையப் போகிறார்கள். இதில் ஊடக அறிக்கை ஒரு கேடா?
பனிப் போர் நடக்கிறதோ இல்லையோ ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போர் நடக்கிறது என்பதை வடக்குத் தேர்தல் கற்பனைகளைக் கடந்து சொல்லியிருக்கிறது.
80 களில் டக்ளஸ் தேவானந்தா, பிரபாகரன், சுரேஷ் பிரேமச் சந்திரன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியத அத்தனை நிபந்தனைகளும் இன்றும் காணப்படுகின்றன என ஈ.பி.டி.பி இற்கும் சேர்த்தே மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பனிப் போருக்காக ஊடகங்கள் மீது போர் தொடுப்பதைத் தவிர்த்து மக்கள் மீது போர்தொடுக்கும் பாசிச அரசின் போருக்குத் துணை போவதை ஜனநாயகம் என்று கூறுவதை நிறுத்திக் கொண்டாலே ஈ.பி.டி.பி ஜனநாயக வழிமுறைக்குச் திரும்பியதற்கான முதல் படியாகவிருக்கும்.