Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்னும் சில வார காலத்தில் நேபாளத்தில் பெரும் புரட்சி வெடிக்கும்!:பிரச்சந்தா

இன்னும் சில வார காலத்தில் நேபாளத்தில் பெரும் புரட்சி வெடிக்கும் என்றும், அப்புரட்சியை ஐ.நா.வும் ஆதரிக்கும் என்று நேபாள முன்னாள் பிரதமரும், மாவோ யிஸ்ட் தலைவருமான பிரச்சந்தா காத்மாண்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹாங்காங் சென்றிருந்த பிரச்சந்தா சனிக்கிழமை இரவில் நேபாளம் திரும்பி னார். விமான நிலையத்தில் பிரச்சந்தா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மாவோயிஸ்ட் தலைமையில் மற்ற கட்சிகளும் கொண்ட அரசை நிறுவக் கருத்தொற்றுமை காண தமது கட்சி முயன்று வருகிறது என்று அவர் கூறினார். அப்படி அரசு அமையாவிட்டால் நாட்டில் கலகம் வெடிக்கும். அக்கலகத்தை ஐ.நாவும் ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – யுஎம்எல் தலைவரும், பிரதமரின் அரசியல் ஆலோசகருமான ரகுஜி பந்த் கூறுகையில், மாவோயிஸ்ட்டுகள் அமைதி நட வடிக்கையில் உறுதியாக இல்லை என்றும் அரசியல் சட்ட வரைவுக்கு எதிராக உள்ளனர் என்றும் கூறினார்.

இதற்கிடையில், நேபாள ராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள் அனைத்தும், ஹெலி காப்டர் தவிர, மாவோ யிஸ்ட் ராணுவத்திடம் உள் ளது என்று அண்மையில் பிரச்சந்தா தெரிவித்துள்ளார். நேபாளி காங்கிரஸ் மற்றும் யுஎம்எல் தலைவர் களிடையே இதுபற்றி விவாதம் நடந்துள்ளது.

சிபிஎன் – யுஎம்எல் தலைமையிலான அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, நாடா ளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸ் தெரிவித் துள்ளது. நேபாளி காங்கிரஸ் தலைவர்கள் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித் தனர். அப்போது புதிய அரசியல் சட்டம் எழுதப்பட்டு தேர்தல் நடைபெறும் வரை அரசுக்கு முழு ஆதரவு அளிப் பதாக நேபாளி காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மாதவ் குமார் நேபாளிடம் கூறினர்.

Exit mobile version