Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க மறுத்தவர்கள்

interpolஏகாதிபத்திய நாடுகளின் உலக தெருச் சண்டியனாகச் செயற்படும் இன்டர்போல் நிறுவனம் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி 40 புலிகளின் உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசின் வேண்டுகொளிற்கு இணங்க இந்தச் சிவப்பு எச்சரிக்கை ஒரு சில வாரங்களுக்குள் வழங்கப்பட்டது, இதற்குப் பின்னரும் ஏகாதிபத்தியங்கள் தமிழர்களுக்குச் சார்பானவையே என்ற பிரச்சாரங்கள் ஓயவில்லை. இச் சிவப்பு எச்சரிக்கை நெடியவன், வினாயகம் என்ற முன்னைநாள் புலி உறுப்பினர்கள் உட்பட பல தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரையினில் வெள்ளையர்கள் அல்லாதோருக்கு எதிரான ஹிட்லர் பாணியிலான நாசிப் படைகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளன. உக்ரையின் யூதர்களுக்கு எதிராகவும், அங்கு வாழும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் ரஷ்யர்களுக்கு எதிராகவும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட நாசிப் படைகள் நேரடியாக ஹிட்லரின் ஆதரவு அமைப்புக்களாகச் செயற்படுகின்றன. ரஷ்ய அரசு இலங்கை அரசைப் போன்றே இவர்களின் உக்ரையின் நாட்டு தலைவர்களுக்கு எதிராகவும் சிவப்பு எச்சரிக்கை விடுமாறு இன்டர்போலை கோரிக்கை விடுத்தது. அக்கோரிகையை இன்டர்போல் நிராகரித்துள்ளது.

இதேபோல பாகிஸ்தானின் முன்னை நாள் அதிபரும் அமெரிக்காவின் நண்படுமான பார்வேஸ் முஷாரப் இற்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுப்பதை மறுத்துவந்தது.

இவ்வாறு மேற்கு அரசுகளின் ஆதரவான பல யுத்தக் குற்றவாளிகளை இன்டர்போல் நிறுவனம் காப்பாற்றி வந்துள்ள நிலையில் ஏகாதிபத்திய ஆதரவு ராஜபக்ச அரசின் வேண்டுகோளை ஏற்று ஏகாதிபத்திய அடிமைகளான தமிழ் செயற்பாட்டாளர்களை முடக்கியுள்ளது.

Exit mobile version