அனைத்தும் அவமானகரமான வியாபாரமாக்கப்பட்ட அருவருப்பான சூழலில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். நிச்சயமற்ற இச் சூழலுக்கு எதிராக எமது எல்லைக்குள் போராடுவதும், வியாபாரிகளுக்கு விலைபோகாமலிருப்பதும் மகிழ்ச்சியானதே! கொலை மிரட்டல்கள், அவதூறுகள் போன்ற அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் துளிர்விடுவதற்காக இனியொரு பெருமை கொள்கிறது.
லைக்கா மோபல் நிறுவனத்தின் இலங்கை அரசுடனான உறவுகள் குறித்து எழுதிய பின்னர் லங்காநியூஸ்வெப் மற்றும் இனியொரு ஆகிய இணையங்கள் உட்பட சில இணையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
சேவை மறுப்புத் தாக்குதல் (DDOS) என்று அழைக்கப்படும் வகையிலான தாக்குதல் கடந்த 03ம் திகதியிலிருந்து இனியொருவைக் குறிவைத்து நடத்தப்படுகின்றது. பல தடவைகள் இனியொரு முடக்கப்பட்டது. கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
ஆயிரம் தடவைகள் இனியொரு முடக்கப்பட்டாலும் அது மீண்டும் முளைவிடும். இனியொரு மீது நடத்தப்படும் தாக்குதல் எமக்கு தெளிவான செய்தியொன்றைச் சொல்கிறது. ஒடுக்கப்படும் மக்களுக்ககவும் சமூகத்திற்காகவும் குரலெழுப்ப இனியொருவும் அதன் கருத்துக்களும் ஏதாவது ஒருவகையில் மக்களைச் சென்றடைந்தாக வேண்டும் என்பதே அது.
இனியொரு மக்களுக்கானது…. இனியொரு ஜனநாயகவாதிகளுக்கானது….சமூகத்தைப் பற்றிச் அக்கறைகொண்ட அனைவருக்குமானது…. இனியொரு ஒடுக்கப்படுபவர்களின் குரல்…. அதனால் மக்களின் அவலங்களை வியாபாரமாக்கும் அருவருப்பான மனிதர்களுக்கு எதிரானது. அதனால் தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது.
தாக்குதல்கள் எம்மை மேலும் பலப்படுத்துகின்றன. எமது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துகிறது. பங்களிப்பவர்களின் தொகையை அதிகரிக்கின்றது. பரந்த வாசகர்வட்டத்தை வழங்கிவருகின்றது. இனியொரு மீது தாக்குதல் நடத்தி இணையத்தை முடக்க முனைபவர்கள் அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றனர்.
இனியொரு மீது இறுதியாக நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு செக்கண்ட் இற்கு 12 GB அளவைக் கொண்டது. வங்கிகள் போன்ற பாரிய நிறுவனங்களை நோக்கி நடத்தப்படும் தாக்குதலுக்கு இணையாக இனியொரு குறிவைக்கப்படுகின்றது. இறுதியாக நேற்று (11.11.2.14) நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான எமது சேவை வழங்குனர் அனுப்பிவைத்த மின்னஞ்சலின் பிரதி:
Thank you for contacting us.
Our network administrators informed us that your IP address, 217.——is currently blackholed. This was do to an incoming DDOS attack. This attack was generating 12GByte/s which was causing network latency for a number of our other clients. Our administrators are going to route the IP address back to your server within the next few hours. Unfortunately DDOS attacks of this size leave us with little options when it comes to protecting our network integrity.
You may receive a short survey within the next 24-48 hours. Please take a moment to complete it so that we may continue to improve our customer experience.
If you have any further questions please do not hesitate to contact us.
—
Sincerely,
Robert Packard
Technical Support
1&1 Internet