போராளிகளே .. ..
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்தவர் மட்டுமல்ல
நாம் வாழ
தம் வாழ்வழித்த நீரும்
தியாகத்துள் தான் வைக்கப்பட்டீர்
உம்மை எதிரி அழித்ததைவிட
எம் ஈனச்செயல் அழித்ததே அதிகம்
இப்போதும் திருந்தாத நாம் – இனி
எப்போதும் திருந்தத் தேவையில்லை
ஏனெனில் தமிழரில்லா ஈழத்தில்
தமிழர் எமக்கென்ன வேலை?
அனைத்துப் போராளிகளையும்
அணைத்துத்தான் போக முடியவில்லை
இணைத்து விளக்கேற்றவுமா
எம்மால் முடியாது?
மாவீரர் தம்புகழ் நீட்டவல்ல
நாவீரர் எம்புகழ் நாட்டநல்ல
வழியது என்பதனால்
விழியுருக வேண்டுவதாய்
பாவனை செய்கிறோம்
மண்மீட்புக்காய்
மண்மீண்ட போராளிகளுக்குத்
தனியாய்த் தீபமேற்றித் தரம்பிரிப்பதை
இனியாவது தவிர்ப்போமா?
தியாகிகள் தினமென்றும்
மாவீரர் நாளென்றும்
மண்ணில் இனிவேண்டாம்
அடக்குமுறைக் கெதிராய்த்
தடம்பதித்துச் சென்றோர்க்கும்
தமிழர் என்பதனால் தானழிந்து போனோர்க்கும்
ஒன்றாய் நாம் மலர்தூவின்
நன்றாம், இல்லையெனில் ..