Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனிமேல் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை : கோத்தா

இலங்கையில் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் அனாதரவனா நிலையில் இலங்கைப் பேரினவாத அரசால் கைவிடப்பட்டுள்ளனர். ஏழ்மையும் நோயுமாக துயரம் மிக்க சமூகம் ஒன்றையே இலங்கை அரசின் இன அழிப்பு தோற்றுவித்துள்ளது. ஊனமுற்ற சந்ததி ஒன்று உருவாகிவருகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் எல்லோரையும் மீள் குடியேற்றிவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது.
யுத்த இடம்பெயர் மக்கள் யாரும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வடக்கு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 200க்கும் குறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே தற்போது புனர்வாழ்வு பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.விரைவில் இந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version