இதேசமயம், நேற்று மாலை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் சம்பந்தன் பேசியிருந்தார்.
இதன்பின்னர் பெரும்பாலும் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகின்ற நாளுக்கு டிசெம்பர் 17 ஆம் திகதிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக அவர் மீண்டும் ஜெனரல் சரத் பொன்சேகா ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகின்றது.
இந்தத் தடவை எந்தத் தரப்புடனாவது இந்தத் தேர்தலை ஒட்டி ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு உடன்பாட்டுக்கு நாம் வருவோமானால், அதில் உறுதியளிக்கப்படும் விடயங்களை நிறைவு செய்வதற்கு சர்வதேச தரப்பு ஒன்று அல்லது பலவற்றின் உறுதிமொழியையும் அதனுடன் சேர்த்துப் பெற்றுக்கொள்ளத் தவறமாட்டோம் என்றார் கூட்டமைப்பின் அந்த சிரேஷ்ட தலைவர்.
எனினும் சம்பந்தன் – சரத் பொன்சேகா சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.