Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனவாதத்தை விதைக்கிறது அரசாங்கம்! இராவண பலய மிரட்டலுக்கு அஞ்சேன்: சிறீதரன்

sritharanதமிழர்கள் வெளிப்படுத்துகின்ற நல்லிணக்கத்தை இலங்கை அரசாங்கம் மதிப்பதாக தெரியவில்லை. மாறான இராவண பலய போன்ற கட்சிகளைத் தூண்டி இனத்துவேசத்தையே விதைத்து வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.

தமிழினத்தை சகல வழிகளிலும் அழிக்கின்ற கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதற்காக இராவணபலய போன்ற சிங்கள அமைப்பைப் பயன்படுத்தி அவர்களை தமிழ் மக்கள் மீது ஏவி விடுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

என்னைக் கொழும்பு வர விடமாட்டோம் என இராவண பலய என்ற அமைப்பு எச்சரித்துள்ளது. இவர்களது அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சப்போவதில்லை எனவும் சிறீதரன் எம்.பி. கூறினார்.

நாவற்குழியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களை அச்சுறுத் சிங்கள அமைப்புக்கள் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ் மக்களைப் பார்வையிட நான் அங்கு சென்றவேளை அப்பகுதியில் நின்றிருந்த இராணுவத்தினர் உடனடியாகக் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்த பெண்மணியுடன் நிலைமைகள் தொடர்பாக பேசினேன்.

இதனை பெரிதுபடுத்தி சிங்கள மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக சில சிங்கள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இங்கு தமிழர்களின் தமிழர்களிகன் நிலங்களைப் பறித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அத்தோடு ஆலயங்களில் இடம்பெறுகின்ற திருட்டுக்கள் மற்றும் புதிது புதிதாக இங்கு முளைக்கின்ற புத்தர்சிலைகள் என்பன தொடர்ச்சியாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதனையெல்லாம் அரசாங்கம் மிகவும் தீவிரமாகச் செய்து வருகின்றது. இது அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையின் அங்கமே.

தேர்தலை நடத்துவதன் முலம் ஐனநாயகம் ஏற்பட்டு விட்டதாக அரசு கூற முடியாது. இங்கு தற்போதும் இராணுவ அடக்குமுறைகள் கெடுபிடிகளுக்குள்ளுமே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

-இலங்கை அரசோடு கைகுலுக்கிக் கொள்வது நல்லிணக்கமென சிறிதரன் போன்றவர்களும் மக்களை நம்பக் கோருக்கிறார்கள்.

Exit mobile version