Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனவாதத்திற்கு எதிராக : இப்போது ரனிலின் சுற்று

equalrightsஅனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன முரண்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரனில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த 83 இனப்படுகொலையே இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட அளவில் நடைபெற்ற முதல் பெரிய மனிதப்படுகொலை. சிங்கள பௌத்த மேலாதிக்கக் இனவாதக் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லீம்களிம் சனத்தொகை அதிகரிப்ப்தாகவும் சிங்கள மக்களின் சனத்தொகை குறைவதாகவும் உலா வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றார்.
1947ம் ஆண்டு சிங்கள மக்களின் சனத்தொகை 63 வீதம் எனவும், தற்போது சிங்கள மக்களின் சனத்தொகை 75 வீதம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், பெருமளவிலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியதனைத் தொடர்ந்து சிறுபான்மை இன சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துள்ளதாகவும், சிங்கள மக்கள் அழிவடைந்து வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.போர்த்தகேயர் காலத்தில் பின்னரே முஸ்லிம்கள் நாட்டுக்கள் பிரவேசித்ததாகக் குறிப்பிடப்படுவதாகவும், போர்த்துகேயரை நாட்டக்குள் அனுமதிக்க வேண்டாம் என 8ம் பராக்கிரமபாகுவிற்கு முஸ்லிம்களே எச்சரிக்கை விடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version