Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனவாதக் கட்சியென இன்னொரு முறை நிறுவும் ஜே.வீ.பி

ramalingam_chandrasegarஇந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என  கனடாவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் நஷனல் போஸ்ட் என்ற பத்திரிகைக்குப் செவ்வியளித்திருந்த சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஜே.வி.பி அவருக்கு ஆதரவு வழங்கத் தயார் என அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே லால் காந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்த களத்தில் நன்கு தேர்ச்சிப் பெற்ற சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதித் தேர்தல் கிரிக்கெட் போட்டியைப் போன்றது. நன்றாக விளையாடும் அணியே இதில் வெற்றிபெறும். அரசாங்கத்தின் வேட்பாளரைவிட முன்னாள் இராணுவத் தளபதிக்கு இதில் அதிக சாதகனங்கள் இருக்கின்றன.
தேர்தல் விளையாட்டுக்களைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு எதுவும் தெரியாது. தேர்தலுக்காக கடந்த ஒன்றரை வருடங்களில் அரசாங்கம் 154 கோடி ரூபாவிற்கும் மேலதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளது. எனினும், படையினருக்கான வீடமைப்பிற்காக 70 கோடி ரூபாவே செலவிடப்பட்டதாகவும் லால் காந்த தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தமது கட்சி ஒன்று தான் தமிழ் பேசும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகவும் ராஜபக்ச இரத்தம் குடிக்கும் பேய் என்றும் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது தெரிவித்தார்.

Exit mobile version