வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின் போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார்.
இதன் போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை வன்னிப் படுகொலைகள் மட்டுமல்ல, அறுபது ஆண்டுகளாகத் தமிழ்ப் பேசும் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் விக்னேஸ்வரன் தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடு.
வடமாகண சபையினூடாக கிழக்கைத் தனிமைப்படுத்தி யாழ்ப்பாண மையவாதக் சிந்தனையை முன்னெடுக்கும் விக்னேஸ்வரன் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை தேசிய இன ஒடுக்குமுறை என்பதையே நிராகரிக்கிறார். தேசிய இன ஒடுக்குமுறையின் உச்சவடிவமே இனவழிப்பு என்பதை சட்டம்படித்த மேட்டுக்குடிக் கனவான் விக்னேஸ்வரனுக்குப் புரியாதது புதிரானதல்ல.
விக்னேஸ்வரன் கும்பலின் அரசியல் சதியை எதிர்கொள்ள இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் புதிய மக்கள் சார்ந்த அரசியல் முன்வைக்கபடவேண்டும்.