இவ்வாறான ஆதாரங்கள் உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதும், உலகில் போராடும் மக்களோடும் ஜனநாயக முற்போக்கு சக்திகளோடு இணைந்து இலங்கை அரசை அம்பலப்படுத்துவதுமே இன்றைய தேவையாகும். இலங்கை அரசு எந்தப் பய உணர்வுமின்றி இனப்படுகொலையை நடத்தியதானது உலகில் எந்த அரசும் இவ்வாறு நடந்துகொள்ள ஒரு முன்னுதாரணம். ஆக, உலகின் ஏனை ஒடுக்கப்பட்ட இனங்களோடுடனான பிணைப்பு இன்னும் அதிகமாகவே அவசியமாகிறது.