2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சமூக நீதிக் கண்ணோட்டத்தில், சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை பிரதமர் அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் இரண்டே இரண்டு அமைச்சர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்கள் என காரணம் கூறி, அதற்கென ஒரு குழுவை நியமித்து, பரிசீலிக்கப்படும் என்ற முடிவு பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களே சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்கின்றனர். அவர்கள் சமூக நீதிக்கு விரோதமானவர்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார். இவர்களுக்கு தேவை ஏற்படும் போது தமிழ் தமிழன் என்று பேசுவதும் தமிழனுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பம்மிப் பதுங்குவதையுமே நாம் கண்கூடகாகக் கண்டோம். பெரியாருக்குப் பின்னர் திராவிடக் கொள்கை அதன் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. சில குடும்ப சார்வாதிகாரிகள் தங்களின் வாரிசு அரசியலை வளர்க்க திராவிடக் கொள்கையின் பெயரால் கண்ணெதிரே நடக்கும் மக்கள் கொலைகளை வேடிக்கை பார்த்தது சென்ற வருட வரலாறு…..