Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்பிரச்சனை காங்ரசின் நிலைப்பாடே எமது நிலைப்பாடும் : பாரதீய ஜனதா

இலங்கையின் இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் ஆகும் என்று இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் புதுடில்லியில் வைத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருப்பதாகவும் சுஸ்மா குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதாக்கட்சி, தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல. அது தமிழகத்திலும் கூட எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவிரும்புகிறது.
இந்து மதவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியை நட்பு சக்திகளாக அறிவித்து தமிழ் இனவாதிகள் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version