Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலை நாளில் திட்டமிட்டு ஜேர்மனியில் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்பு

warcrimeandgenocideமே மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் 18ஆம் திகதிகளில் முடிவுக்கு வந்த யுத்தத்தில், வன்னியில் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு சாரிசாரியாக மக்கள் பலியாகினர். இரத்தமும் சதையுமய் ஒரு நிலப்பரப்பு முழுவதையும் மாற்றிய இந்த நாளின் அவலங்களை மனிதர்கள் யாரும் மறந்துவிடவில்லை. இந்த நாளை நினைவு கூருதல் என்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அது நிராகரிக்கப்பட முடியாதது.

வெறுமனே களியாட்டங்கள் போலன்றி, தென்னித்திய சினிமா மற்றும் அரசியல் வாதிகளின் உணர்ச்சிப் பேச்சுக்களாகவன்றி புரட்சிகர எழுச்சிக்கான நாளாக உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு இனப்படுகொலையை நினைவுபட்டுத்தும் நாளாக அமைய வேண்டும்.

இந்த இரண்டு நாளையும் தெரிந்தெடுத்த புலம்பெயர் இலங்கை அரச தொங்கு தசைகள் பலர் இணையும் கூட்டமைப்பு ஒன்று ஜேர்மனியில் 42வது இலக்கியச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறும் இச்சந்திப்பு கடந்த தடவை புலம்பெயர் நாடுகளிலிருந்து மீண்டும் பின்புறமாகப் புலம்பெயர்ந்து இலங்கையில் நடத்தப்பட்டது.

இவர்கள் குறிப்பாக இந்த் இரண்டு நாட்களைத் தெரிவு செய்தமைக்கும், இனப்படுகொலையின் நினைவு நாளில் இதனை நடத்துவதற்கும் பின்புலம் என்ன என்பது குறித்து ஆழ அகலமான ஆய்வுகள் தேவையில்லை.

Exit mobile version