மனித உரிமைகள் சம்மந்தமான விடயங்களில் பொறுப்பேற்றல் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே அளித்த உறுதிமொழிகள் எந்த அளவுக்கு அமல் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சர்வதேச அளவில் உள்ள அனுபவங்கள் மற்றும் ஏற்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் தனக்கு அறிவுறை கூறக்கூடிய நிபுணர் குழு அமைப்பது குறித்து முயற்சி எடுத்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக ஐ நா பொதுச் செயலர் கூறி 80 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் போனதற்கு இலங்கை அரசின் அழுத்தம் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.