அனுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தங்கும் ஆடம்பர மாளிகையில் அவரைச் சந்தித்த ஜப்பானியத் தளபதி, இலங்கைத் துறைமுகத்தில் ஜப்பான் ஆர்வம் காட்டி வருவதாகவும், அடுத்த ஒரு இரு வருடங்களில் ஜப்பன் 15 போர்க் கப்பலை அனுப்ப போவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையை யுத்தக் கப்பல்களாலும், அதி பயங்கர ஆயுதங்களாலும், இராணுவப் பயங்கரவாதிகளாலும், மகிந்த ராஜபக்ச போன்ற கொடிய போர்க்குற்றவாளிகளாலும் நிரப்பிவைத்துவிட்டு கற்றுக்கொள்ள முனையும் ஜப்பானின் எஜமான் அமெரிக்கா இலங்கையைத் தண்டிக்கப்போவதாகப் படம்காட்டி வருகிறது.