Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலை – இலங்கை பெற்ற வெற்றி – மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரப் பாசிச அரசு கொலைகளின் மீது ஆட்சியை நடத்திவருகிறது. வட-கிழக்கு இராணுவமயமாக்கப்ப்பட்டுள்ளது. பேரினவாத ஆட்சியை மேலும் வலியுறுத்தும் மற்றொரு மகிந்தவின் உரை இது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். கொடூர யுத்தத்தோடு மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம். எமக்கு பல விதமான அழுத்தங்கள் இருக்கின்றன. இன்று பல விதமான குற்றச்சாட்டுகள் எம்மீது சுமத்தப்படுகின்றன. நாடு பெற்ற வெற்றியை வேறுவிதமாக காட்ட முயற்சிக்கின்றனர். விசேடமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களும், டொலர்களுக்கு அடிபணிந்தவர்களும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

சிலர் எம்மை வெளிநாடுகளில் உள்ள மின்சார நாற்காலிகளுக்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர். இலங்கை பெற்ற வெற்றியை தரம் தாழ்த்தவே அவர்கள் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவில் இருந்த வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் என்னுடன் பேசினார். இலங்கையில் நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கையை தாம் உயர்வான மதிப்பீட்டில் காண்பதாக அவர் கூறினார்.பொது மக்களுக்கு எவ்விதமான இழப்புகளும் ஏற்படாத வகையிலேயே நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கை மீட்கும் போரில் பொதுமக்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் வடக்கை மீட்டது குறித்து வேறு விதமாக பார்க்கின்றனர். வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையானது உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே. இதில் வேறு எந்த செயற்பாடுகளும் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version