பல்வேறு இன மக்களிடையே ஐக்கியத்தை எதிர்பார்க்கும் நாடொன்று, மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வை தேடுவது, முக்கியமானது. இலங்கை இதனை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
கொலைக்காரர்களே கொலைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்று உலகின் போர்ப்பிரபு நாடான அமரிக்காவின் பேச்சாளார் கூறியிருப்பதை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று தமிழ் ஊடகக் கோமாளிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனரிடம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு, அது வெளியிடப்படும் வரை அமெரிக்கா காத்திருக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார்.
இதே வேளை ஆப்கானிஸ்தானுக்கு கொலைப்படைகளை இலங்கையிலிருந்து அனுப்புவது குறித்து கோதாபய ராஜபக்சவுடன் பிளேக் பேச்சு நடத்தியது தொடர்பான செய்திகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.