Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலை : இந்திய மருத்துவரின் சாட்சியம்!

கடந்த வருடப் போரின் இறுதிக் கட்டப் போரின் போது அகதிகளுக்குச் சிகிசையளித்த இந்திய வைத்திய அதிகாரி ஒருவர் ஏராளமான பொதுமக்க பாதிக்கப்ப்ட்டது தொடர்பாக சாட்சியமளித்துள்ளார். “அங்கு செல்வதற்கு முன்பு நாங்கள் இவ்வளவு இழபுக்களைக் காண்பதற்குத் தயாராக இருக்கவில்லை…மிக நீண்ட வரிசையில் மக்கள் சிகிச்சைக்காக காத்திருந்தனர்” ” 80 வீதமான மக்களின் உறவினர்களோ அல்லது அவர்களுக்குட் தெரிந்த குடும்பங்களின் உறவினர்களோ கொல்லப்பட்டதாகவும், ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் தெரிவித்தனர்” ” ஷெ, துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன” ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த இந்ய மருத்துவர், ஒரு வருடங்களின் பின்னரும் என்ன நடந்தது என்பதை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்துவிட்டனர் என்று தெரிவித்தார். 40 ஆயிரம் அகதிகளுக்கு சிகிச்சை வழங்கியமருத்துவர் குழுவில் இவரும் ஒருவர். நாங்கள் ஷெல் மற்றும் குண்டுகள் துழைத்த குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கியுள்ளோம், கைக்குழந்தைகள் கூடக் குண்டு துளைத்தவர்களாகக் காணப்பட்டனர். 80 வீதமானவர்கள் போசாக்கற்றார்க்ளாக காணப்பட்டனர். இவரின் வாக்குமூலம் கணிக்கத்த்க்க நேரடி வாக்குமூலமாகும் என ஹிந்துஸ்தான் ரைம்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது.

Exit mobile version