
சில புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தொடர்பாகவும் இலங்கை அரசு தொடர்பாகவும் தவறான விம்பத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களை எதிர்நோக்க அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது சில தரப்பினர் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.