ஈழப் போராட்டத்தை எதிர்க்கும் சுப்பிரமணியம் சுவாமி, வன்னி இனப்படுகொலைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தமிழின விரோதியாகத் தம்மை வெளிப்படையாகக் கூறும் சுவாமி, ஜெயலலிதாவின் நண்பர். சாதி வெறியரான சுப்பிரமணிய சுவாமி, தமிழ் நாட்டில் பார்ப்பன அதிகாரத்தை உறுதிப்படுத்த இன்று வரை செயலாற்றி வருகிறார். ரஜீவ் காந்தி கொலைக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கும் தொடர்புகள் காணப்படுவதாக சர்ச்சைகள் உருவாகியிருந்தன. வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய வழக்குரைஞர்களோடு நேரடியாக மோதியவர்.