இராணுவ சேவைகள் அதிகாரசபை எதிர்வரும் 18 ஆம் திகதியை பயங்கரவாத ஒழிப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி உள்ளது.
இக்கொண்டாட்டங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஒருவார காலம்வரை இடம்பெறும். இறுதி நாளான 18 ஆம் திகதி நாடாளுமன்ற விளையாட்டு மைதானத்துக்கு எதிர்ப்பக்கமாக அமைந்திருக்கும் போர் வீரர்கள் நினைவுத் தூபி முன்பாக சம்பிரதாய வைபவம் ஒன்று இடம்பெற உள்ளது.
இச்சம்பிரதாய வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார்.
இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
அத்தினத்தில் மாலை 6 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி, போரில் உயிரைத் தியாகம் செய்த படையினரை நினைவுகூரவேண்டுமென்று இராணுவ சேவைகள் அதிகாரசபை கோரி உள்ளது.