Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலையின் தலைமைச் சூத்திரதாரி தலைமைதாங்கும் பண்பாட்டு நிகழ்வு

வன்னி இனப்படுகொலையைத் தலைமைதாங்கி நடத்தியவரும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் பண்பாட்டுக்கொலையைத் திட்டமிட்டு நடத்தும் பேரின வாத அரசின் தலைவருமான மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் நிகழ்வைத் தலைமை தாங்கவுள்ளார். இது குறித்து ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில், இறுதி தினமான 17 ஆம் திகதி ஜனாதிபதி தேசிய தைப்பொங்கல் வைபவத்தில் கலந்துக்கொள்வதானது தமிழ் மக்களுக்கு பிறக்கும் சௌபாக்கியமாக தான் கருதுவதாகக் கூறுகிறார்.
வைபவத்தில் 50 ஆயிரம் மக்கள் வரை கலந்துக்கொள்வார்கள் என்பதால், அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளில் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் யாழ் நகர முதல்வர் ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதே வேளை யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் கருத்துப்படி, இலங்கைத் தேசிய கீதம் யாழ்ப்பாணத்தில் சிங்களத்திலேயே இசைக்கப்பட வேண்டும் என்பதில் டக்களசே முனைப்புக்காட்டியதாகக் கூறியுள்ளார்.

Exit mobile version