இன அழிப்பிற்கு மகிந்த ராஜபக்ச அரசு இந்தக் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்தமை இப்போது ஆதாரபூர்வமாகநிறுவப்பட்டுள்ளது.
போர் நடைபெறும் போதே இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இலங்கை ராணுவம் மறுத்தது.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு கொத்துக் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, வெடிக்காத நிலையில் கொத்து குண்டு ஒன்றை தான் கண்டுபிடித்ததாக அந்த ஐ.நா.பணியாளர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின் போது அப்பாவி ஈழ்த்தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பகுதிமேல் இலங்கை விமானப்படை இந்த கொத்துக் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது.