Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனப்படுகொலைக்கு எதிரான அழுத்தங்களை எதிர்கொள்ள இந்தியாவே உதவியது : கோதாபய

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இராணுவ நடவடிக்கையில் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு புது டில்லியுடனான புரிந்துணர்வே உதவியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் அனுபவங்கள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியாவினால் மட்டுமே யுத்தத்திற்குச் செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி யுத்தத்தின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றங்கள் பற்றியும் புதுடில்லிக்கு விளக்கமளித்து, இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்திக் கொண்டமை சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் யுத்த வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியா, பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவர்கள் முன்னிலையிலேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதற்கான காரணத்தை அவர் விளக்கிக் கூறினார்.

படையினரின் பலம் விஸ்தரிக்கப்பட்டமை மற்றும் சர்வதேச அழுத்தங்கள் அரசியல் தலைமைத்துவத்தால் சமாளிக்கப்பட்டமை போன்றவற்றுக்கு இந்தியாவின் பங்களிப்பே முக்கிய காரணம் என்றும், சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் கையாண்ட விதமும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version