புலிகளால் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில் மரணமான காமினி திசனாயக்காவின் புதல்வர் நவீன் திசனாயக்க எதிர்தரப்பில் இணைந்துள்ளார். இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் இறுதிப்போரில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கியது அதனால் இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா சூழ்ச்சி செய்வதாக மகிந்த கூறுவது அர்த்தமற்றது என்று அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தெரிவித்தார். வன்னி யுத்ததின் இறுதி நாட்களில் மகிந்த ராஜபக்ச வெளி நாட்டிலிருந்தார் அவ்வேளையில் மைத்திரிபால சிரிசேனவே பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.
ஆக, அமெரிக்க இந்திய அரசுகள் நடத்திய யுத்தத்தை மைத்திரிபாலவும் மகிந்தவும் தலைமை தாங்கியுள்ளனர் என்பதை நவீன் திசனாயக்க வெளிப்படையாகக் கூறியுள்ளார். கூடவே இனப்படுகொலையை நிகழ்த்திய ‘பெருமை’ மைத்திரிபாலவையும் சார்ந்ததே என்று நவீன் திசனாயக்க பெரினவாத வெறியை அதிகப்படுத்துகிறார். இந்த நிலையில் மகிந்தவை மத்திரி பிரதியிடுவார் என்பதை நவீனின் வாதம்.
இது தவிர கட்சிதாவாமலிருக்க மகிந்த அரசு 100 மில்லியன் ரூபாய்களை லஞ்சமாக வழங்க முற்பட்டார் எனவும் நவீன் கருத்துவெளியிட்டார்.