இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இராணுவத்திற்கான பயிற்சி கர்நாடகம் மாநிலம் பெலகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும்போதே இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி மேலுள்ளவாறு தெரிவிததுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை இராணுவத்தினரை தமிழக அரசியல் தலைவர்கள் குற்ற மனப்பாங்குடன் பார்க்கிறார்கள் என்று கூற முடியாது. இப்போதுகூட, இலங்கைத் தமிழர்கள் பகுதியில் எதிர்பார்த்த வேகத்தில் உதவிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை.
இதனால் அதுபற்றிய உணர்வுகள் தமிழகத்தில் பிரதிபலிக்கின்றன. அதை நாங்கள் மதித்து ஆகவேண்டும். ஒரு விதத்தில் தமிழகத்தின் உணர்வுகளை நாங்கள் மதிக்கவேண்டும். அதை நாம் தவிர்க்க முடியாது.
இந்தியாவின் அண்டை நாடு இலங்கை. அவர்களுடன் நாங்கள் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் நாடு மற்றும் தென்னிந்தியாவுக்கு வெளியே, நாட்டில் ஏராளமான இராணுவ பயிற்சி மையங்கள் உள்ளன. எனவே இரு நாடுகளின் இராணுவ ஒப்பந்தப்படி வேறு ஒரு இராணுவ மையத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிததுள்ளார்.