Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனச் சுத்திகரிப்பு தொடர்கிறது : முள்ளிவாய்க்காலில் வறுமை கொலைசெய்த தம்பதி

முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் வறுமை காரணமாக கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கணுக்கேணி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களான கணவனும் மனைவியும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய சண்முகன் நிறஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நிறஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இனப்படுகொலை அரசு மக்களைப் பட்டினிச் சாவிற்கு உட்படுத்தும் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கில் மக்கள் பட்டினிச் சாவையும் வறுமையையும் எதிர் நோக்கியுள்ளனர்.
இலங்கையில் மக்களைக் கூறுபோட்டு அரசிற்கு எதிரான போராட்டங்களை அழிக்கும் பல்வேறு அரசியல் குழுக்கள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

Exit mobile version