ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே மகிந்த சமரசிங்க போர் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் சுமார் 290,000 இடம்பயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த மக்களுக்கு வசதியான இருப்பிடங்களை பெற்றுக் கொடுத்தல், உணவு, பாதுகாப்பு, வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பின்நிற்கவில்லை. இடம்பெயர்ந்த 95 வீதமான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டவுடன் ஏனையோர் மீள் குடியமர்த்தப்படுவார்கள்.
அரசபடைகளிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 11,644 முன்னாள் போராளிகளில் 6,530 பேர், முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று வரும் எஞ்சிய முன்னாள் போராளிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமும், சட்டரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. இந்த சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
அதன்மூலம் நீதி, நியாயத்தை நிலைநாட்டி, கடந்த காலத்தில் இந்த அழிவுகளுக்கு பொறுப்பாளிகள் யார் என்பதைக் கண்டறிவதிலும் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. ஐ.நா பொதுச்செயலாளர் தமக்கு ஆலோசனை தெரிவிக்கும் குழுவை நியமிக்க முன்னரே அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.