மொழிகளைக் கற்றுக்கொள்ளவது மிகவும் முக்கியமானது. அந்த மொழிகளில் நாம் பேசும் போது இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை நீங்கும். இனங்களுக்கு இடையில் சமவுரிமையை ஏற்படுத்த சிறு வயது முதலே நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை என வேறுபடுத்துகின்றோம்.
நல்லிணக்கம் பற்றி நாம் பேசுகின்றோம். எனினும், சிறு வயது முதலே வெவ்வேறாக வாழ்வது பற்றியே பேசுகின்றோம். இந்த மாற்றத்தை நாம் பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற சமூக ஒருமைப்பாட்டு வார ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, இராணுவமயமாக்கல், பெருந்தேசியவாதம், பாலியல் வல்லுணர்வு போன்றன அனைத்தும் எப்படி இனங்களுக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது குறித்து மகிந்த ராஜப்கச கூறத் தவறிவிட்டார்.