Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக் கொலையாளி மோடி அடுத்த இந்தியப் பிரதமராகலாம்

Modiபாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறார். டெல்லியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களை குஜராத்தில் இனப்படுகொலை செய்த மோடி இந்தியாவின் பிரதமாராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். மோடி இந்திய ஜனநாயகம் என்ற அவமானத்தில் குறியீடாகத் திகழ்கிறார்.
இந்து பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன் அமோக ஆதரவே மோடி பிரதமர் வேட்பாளராகத் தெரிவாகக் காரணமாக இருந்துள்ளது.
இன்று இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் கிரிமினல்களும் இனக்கொலையாளிகளும் நேரடியாகவே ஆட்சியில் பங்குபற்றுகின்றனர்.
இதனை அடுத்து பிரதமர் வேட்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஆதரவு தரப்படும் என கூட்டணி கட்சியான அகாரிதளம் அறிவித்துள்ளது. முன்னதாக பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பங்கேற்ற முதல் நாள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. அத்வானி, சுஷ்மாசுவராஜ் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் மோடியின் தலைமையை ஏற்க தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கலாம் என அவர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் மோடிக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டதால், அத்வானி போன்றவர்களின் பேச்சு எடுபடாமல் போனதாக தெரிகிறது. ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட சமரசத்தை அடுத்து ஒருங்கித்த கருத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version