“இலங்கை எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்” என்ற தொனிப் பொருளில் இடம்பெறும் இந்தக் கருத்தரங்கில் 66 நாடுகளைச் சேர்ந்த 197 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 350 பாதுகாப்பு மற்றும் துறைசார் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இவர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகள், முப்படைகளின் உயர்தர அதிகாரிகள் மற்றும் பேச்சாளர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னேற்றம், பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய சவால்கள் என்ற பல்வேறு தலைப்புக்களில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள பல அமர்வுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேச்சாளர்கள் உரை நிகழ்த்தவுள்ளனர்.
போர்களாலும், மனிதப்படுகொலைகளாலும் இராணுவமயமாகும் உலகிற்கு இலங்கை அரசு முன்னுதாரணம் வழங்குவது வியப்பில்லை. மனிதர்களைச் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்வதில் அனுபவம் வாய்ந்த இலங்கை இராணுவம் உலகின் அனைத்து அதிகாரவர்க்கங்களுடனும் தனது அனுபவங்களையும் கொலைக்கான உக்திகளையும் பகிர்ந்து கொள்கிறது.