Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக்கொலை இராணுவத்திற்குப் பயிற்சியளிப்போம் : இந்தியா

independenceஇலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த வேண்டிய அவசியமில்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது, இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும், இந்த வகையிலான விவாதங்களுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பயிற்சி அளிப்பது தொடர்பான விவகாரம் அண்டை நாடுகள் உடனான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பிரித்தானியா, அமரிக்கா, இந்தியா போன்ற அரச அதிகாரங்கள் இனப்படுகொலை நடத்த இலங்கையின் பின்னணியில் செயற்பட்டன. அதனை மூடி மறைத்து தவறான பிரச்சாரம் மேற்கொண்ட ஊடகங்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களைக் காட்டிகொடுத்தன. இன்று இனக்கொலை அரச இராணுவத்துடன் உலக நாடுகள் உயர்மட்ட இரகசிய உறவுகளை வளர்த்துக்கொள்கின்றன.
இனப்படுகொலை நடத்தப்பட்டு ஐந்து வருடங்களின் பின்னரும், அமரிக்காவும், பிரித்தானியாவும் இந்தியாவும் ராஜபக்சவிற்குத் தண்டனை வழங்கப்போவதாக மக்கள் ஒருங்கிணைவதற்கு தடையாக முன்னிற்கும் இவர்கள் அழிவுகளுக்குத் துணை போகின்றனர்.

இலங்கை இனக் கொலையாளிகளுக்கு அமரிக்கா ஐ.நா அங்கீகாரம் :

Exit mobile version