Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக்கொலை ஆதரவாளர்கள் இருவரின் சந்திப்பின் பின்னணியில்…

palikaraபிரித்தானிய ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய அரசியல்வாதியும் இலங்கை இனப்படுகொலை அரசின் நீண்டகால ஆதரவாளருமான நேசபி பிரபு வடமாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ராஜபக்ச அரசின் ஊதுகுழலாகச் செயற்பட்ட வடமாகாண ஆளுனர் பாளிகாரவை இலங்கை அரசின் மற்றொரு ஊதுகுழலான நேசபி பிரபு சந்தித்திருப்பது தற்செயலானதல்ல.

சுன்னாகம் பேரழிவோடு தொடர்புடைய நிர்ஜ் தேவா என்ற மற்றொரு ஆளும் மொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரின் நெருங்கிய சகாவான நேசபியின் யாழ்ப்பாணப் பயணமும், சுன்னாகத்தை நோக்கிய அவரது பயணமும் சந்தேகத்திற்கு உரியவை.

சுன்னாகத்தில் சுற்றுச் சூழல் அழிப்பில் ஈடுபட்டவர்கள் கிரிமினல் குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டும் என்ற போராட்டங்கள் பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றன.

நேசபி பிரபு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளையில் சுன்னாகத்தில் மின் உற்பத்திக்காக ஆசிய வங்கி கடன் வழங்க முன்வந்திருப்பதும் கவனத்திற்குரியது.

யாழ்ப்பாண மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் தொடர்பாக பாளிகார விக்னேஸ்வரனை விளக்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேசபி பிரபுவின் இனப்படுகொலை ஆதரவுப் பிரச்சாரம்:

வடமாகாண ஆளுனர் பாளிகாரவின் பிரச்சாரம்:

Exit mobile version