தேர்தலில் தனது போட்டியாளர் ரனில் விக்கிரசிங்கவிடம் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்பட்டார். இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பி ஆகியவை வழங்கிய ஆதரவின் காராணமாக ஜனாதிபதியாக ஒரு லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்றார். ரனில் விக்கிரமசிங்கவிற்கு 48.43 வீதமான வாக்குகளும் மகிந்த ராஜபக்சவிற்கு 50.29 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் ரனில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பார்கள் என எதிர்வு கூறப்பட்ட போதிலும் விடுதலைப் புலிகள் வாக்களிக்கக் கூடாது எனத் தடைவிதித்திருந்தனர். விடுதலைப் புலிகளுடனான எழுதப்படாத பண ஒப்பந்ததின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கப்பட்டது.
புலிகள் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு பிரித்தானியாவில் வசித்த புலிகளை வழி நடத்திய அன்டன் பாலசிங்கம் பிரதான காணமாக அமைந்தார். அதே வேளை இலங்கையில் இன்று இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் சில பிரமுகர்கள் புலிகளின் மகிந்த ஆதரவு நிலைப்பட்டை வரவேற்றனர். மகிந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் எனக் குறிப்பிட்ட போலி இடதுசாரிப் பிரமுகர்கள் மகிந்த ராஜபக்ச என்ற பாசிஸ்ட் ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவாகச் செயற்பட்டனர்.
2005 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதும் அமெரிக்கப் பிரசாஉரிமை பெற்று அங்கு வசித்துவந்த அவரின் இரண்டு சகோதரர்களான பசில் மற்றும் கோத்தாபய ஆகியோர் நாடுதிரும்பினர். பிரித்தானிய, அமெரிக்க, இந்திய இராணுவக் கல்லூரிகளில் பயிற்சிபெற்ற முன்னை நாள் இராணுவ அதிகாரி கோத்தாபய நந்தசேன ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் அமெரிக்கா, இந்தியா பிரித்தானிய ஆகிய நாடுகளின் பின்னணியில் வன்னி இனப்படுகொலை திட்டமிடப்படுகிறது. முப்படைகளின் தளபதியான மகிந்த ராஜபக்ச கடந்த தசாப்தத்தின் கோரமான மனிதப்படுகொலைகளுக்கு உத்தரவிடுகிறார். மக்களும் புலிகளும் சிறிய ஒடுக்கமான நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டு சாட்சியின்றிச் சாரிசாரியாக அழிக்கப்படுகின்றனர்.
மகிந்தவின் வழிகாட்டலில் கோத்தாபயவின் தலைமையில் நடைபெற்ற மனிதப்படுகொலைகளின் பின்னர் சர்வாதிகாரியும் பாசிஸ்டுமான மகிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார். உலகின் சர்வாதிகார பாசிஸ்டுக்களுக்கு மகிந்த முன்னுதாரணமாகிறார். மனித குலத்தின் விரோதி இலங்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் கொள்ளையிட்டு அன்னிய நாடுகளின் அடியாளாகிறார்.
இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக ஆட்சி நடத்திய மகிந்த ஐ.நாவையும் புலம்பெயர் புலிகளையும் முன்வைத்து தனக்கான அனுதாப வாக்குக்களைத் தேடிக்கொள்கிறார்.
இப்போது மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மகிந்த தயாராகிவிட்டார்.
‘ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், அதனை எவரும் சவாலுக்கு உட்படுத்தினால், நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு பெறப்படும்’ என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவை போட்டியிட முடியாது என்று தொடர்ச்சியாக கூறப்பட்டால் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மனித குலத்தின் விரோதி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு ஏகாதிபத்திய நாடுகளும், ஐ.நாவும், புலம்பெயர் தலைமைகளும் உதவிபுரிகின்றன.