புலிகளின் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பாக இணைந்துகொண்டுள்ளதாகக் கே.பி தொடர்பான வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவுகின்றன.
சிறைக்கைதிகளைக் காப்பாற்றவே தாம் அரசுடன் இணைந்திருப்பதாகக் கே.பி ஆரம்பத்தில் கூறி வந்தார். கே.பி இனக்கொலையாளிகளுடன் கைகோர்த்துக்கொண்ட பின்னரே மனி நாகரீகமே அவமானம் கொள்ளும் வகையில் நிராயுதபாணிகளான அரசியல் கைதிகள் அரசபடைகளால் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இனவெறி அரசு தமிழ் நிலங்களிலிருந்து மக்களை விரட்டியடிக்கிறது. சிங்களக் குடியேற்றங்களைப் பௌத்த பிக்குகளும், பல்தேசிய நிறுவனங்களின் நிலப்பறிப்பை அரச படைகளும் திட்டமிட்டு மேற்கொள்கின்றன.
இவை அனைத்திற்கும் கே.பி டக்ளஸ் தேவாந்ததா போன்றவர்களின் தலைமையில் இயங்கும் மாபியக் கும்பல்கள் ஆதரவளிக்கின்றன. கே.பியின் மாபிய வலையமைப்பு புலம்பெயர் நாடுகள் வரை நீட்சிபெற்றுள்ளது. இங்குள்ள புலி எதிர்ப்பு மற்றும் புலி ஆதரவுக் கும்பல்களைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கை அரசின் இனக்கொலை வியாபாரம் நடைபெறுகிறது.
கடந்த மாதம் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்ற கும்பல் இனவெறியனும் இனக்கொலையாளியுமான கோதாபாய ராஜபக்சவை முதலில் சந்த்திது பின்னர் கே.பியுடன் வன்னி போன்ற பகுதிகளில் சுற்றுலா மேற்கொண்டது.
இதுவரை பிரிதானியாவிலிருந்து முன்னைநாள் புலி ஆதரவாளர்களான இரண்டு நபர்கள் இந்தப்பயணத்தில் இலங்கை சென்றுவந்துள்ளதாக இனியொருவிற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.
வடகிழக்கு லண்டன் பிரன்ட் நகரசபையின் கவுன்சிலரும், தொழிற்கட்சியின் உறுப்பினரும் கணக்காளருமான கணா நகீரதன் என்பவர் பிரித்தானியாவிலிருந்து சென்றவர்களில் முதன்மையானவர். கோதாபய மற்றும் கே.பி ஐச் சந்தித்த இந்தக் குழுவினர் கே.பி உடன் இணைந்து இலங்கையின் இன்றைய சுற்றுலா மையமாகத் திகழும் புலிகளின் தலைமையகம் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
நகீதரனோடு இலங்கைக்குச் சென்ற மற்றவர் சிவாகரன் என்ற கணக்காளர் என்று செய்தியும் கிடைக்கப்பெற்றது. தேசியம், தேசியத் தலைமை ஆகியவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டு இனப்படுகொலை இலங்கை அரசின் புலம்பெயர் உளவாளிகளாகச் செயற்படும் ஏனையோடும் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.