ராஜபக்ச என்ற கோமாளித்தனமான கொடுங்கோலன் அப்பாவிச் சிங்கள மக்களையும் முன்னெப்போதும் இல்லாத ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். வெலிவேரியப் படுகொலைகளின் பின்னர் வன்னியில் நடைந்தது என்ன என்ற உண்மையை உணர்கிறோம் என சிங்கள மக்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் போது அதிகார வர்க்கங்கள் ஒன்றிணைந்து அதனை அழிக்க முற்படுவது வழமை.
வெலிவேரியாவில் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச நடத்திய அப்பாவி மக்கள் மீதான தாக்குதலால் சிங்கள மக்கள் மத்தியில் எழுச்சிகள் உருவாகும் சூழல் தோன்றிய போது மகிந்தவைக் காப்பாற்றியவர்களுள் முக்கியமானவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன். நவனீதம்பிள்ளையிடம் முறையிட்டு ஐ.நா வரைக்கும் பிரச்சனைகளைத் தான் எடுத்துச்செல்வதாகவும் அதனால் சிங்கள மக்களை அமைதியாக இருக்குமாறும் கோரினார்.
வட மாகாண முதலமைச்சர் சிங்கள மக்களோடு நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு ஒடுக்கும் சிங்கள அதிகாரவர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு மகிந்தவின் முன்னிலையில் தனது சிங்கள அதிகாரவர்க்க மருமகன்களுடன் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இவ்வாறே சிங்கள அதிகாரவர்க்கத்துடனும் இனகொலையாளிகளுடனும் இணைப்பை ஏற்படுத்தும் பல்தேசிய நிறுவனங்களை நாம் காண்கிறோம். லைக்கா அவற்றுள் பிரதானமானது.
மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோவில் அமைந்த்துள்ள ஹம்டன் பாடசாலையில் கடந்த மார்ச் மாதம் 30 உணவு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவிவை ஏற்பாடுசெய்தவர் வந்துராம்ப காசப்ப தேரர் என்ற இலங்கை பௌத்த பிக்கு. விழாவிற்கு பண உதவியை வழங்கியதற்காக பிரசாத் ரோசா என்பவரும் இன்டிக கமகே என்பவரும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
யாரிந்த பிரசாத் ரோசா?
லைக்கா பிளை என்ற நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர். லைக்கா பிளை நிறுவனமே விழாவிற்கான முழு செலவையும் பொறுப்பேற்றது. லைக்கா பிளையின் சட்டபூர்வ பங்குதாரர்களில் பிரசாத் ரோசாவும் ஒருவர். 2004 ஆம் ஆண்டிலேயே பிரசாத் ரோசா லைக்கா பிளையின் பங்குதாரராக இணைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடையம். இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை ஐரோப்பாவில் இயக்கும் லைக்கா பிளை 2009 இனவழிப்பின் ஐந்து வருடங்களின் முன்பே இலங்கை அதிகாரவர்க்க வட்டத்துள் நுளைந்துள்ளது. லைக்காவின் தொலைபேசிப் பரிமாற்று அலுவலகம் கொழும்பிலுள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்து லைக்கா தொலை பேசியூடாக நடத்தப்படும் உரையாடல்கள் ராஜபக்சவின் கோட்டையின் ஊடாகவே பயணம் செய்திருக்கின்றன.
லம்ப்டன் பாடசாலையில் நடைபெற்ற லைக்கா பிளையின் “Blend of Delicacies 2014” என்று பெயரிடப்பட விழாவில் கௌரவிக்கப்பட்ட இன்டிக கமகே லைக்கா பிளையில் தகவல் தொழில்னுட்ப முகாமையாளர்.
யாரிந்த பௌத்த பிக்கு
வன்னிப்படுகொலைகள் நிறைவடைந்து ஆறு மாதங்களுக்குள் மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா உட்பட இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதற்காக தியான நிகழ்வை லண்டனில் ஏற்பாடு செய்தவரே லைக்கா பணம் வழங்கிய வந்துராம்ப காசப்ப தேரர். அது தவிர ‘நாட்டைக் காப்பாற்றுவதற்கா உயிரிழந்த’ இராணுவத்தினருக்கு இரண்டு நாள் மேலதிக பூஜைகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
உலகின் ஒரு மூலையில் லட்சம் லட்சமாக மக்கள் கொல்லப்பட்ட அதற்காக விழாவெடுக்கும் காசப்பவின் இன்றைய நண்பர்கள் லைக்கா.
பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு பணத்தைத் தவிர வேறு எதுவும் உயிருள்ளதாகத் தெரிவதில்லை. காசப்பவா கந்தையாவா என்று வந்தால் பணம் கறப்பதற்கு பயன்படும் காசப்பவே அவர்களின் நண்பன். இப்போது நடிகர் விஜய் நண்பன். ஆளும் வர்க்கக் கனவிலிருக்கும் சீமானும் நண்பன்.
ஆதாரங்கள்:
http://www.sesatha.co.uk/Event_News/20140301_SL_Food_Festival/index.htm
http://companycheck.co.uk/company/06194960/U-CAN-FLY-LIMITED/directors-secretaries
http://www.defence.lk/new.asp?fname=20090529_10