Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனக்கொலைக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தவர் எதிரணியில் முக்கிய புள்ளி

rajithaவன்னிப் படுகொலைகள் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், 16ம் திகதி டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு, ரோரிக் கட்சியில் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த லியம் பொக்ஸ் மற்றும் அடம் வெரட்டி என்ற அவரது எடுபிடியும் இலங்கைக்குச் சென்று ராஜபக்சவைச் சந்தித்தனர். மகிந்த ராஜபக்சவின் ஆதரவோடு கொலைசெய்யப்பட்ட இலங்கையின் வெளி நாட்டமைச்சர் லக்மன் கதிர்காமரின் நினைவு தினத்தில் தலைமை உரையாற்றவே லியம் பொக்ஸ் இலங்கைகுச் சென்றார்.

லியாம் பொக்சின் அறிவுத்தலைத் தொடர்ந்து ராஜபக்ச தொடர்பாக பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ‘தவறான’ அபிப்பிராயத்திற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு ராஜபக்ச அரசு வந்து சேர்கிறது. அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனத்தை ராஜப்கசவிற்கு ஆதரவான எண்ணத்தை பிரித்தானிய ஜனநாய சக்திகளிடையேயும், மனித உரிமைவாதிகள் மற்றும் இடதுசாரிகளிடையேயும் ஏற்படுத்த வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

2010 ஆம் ஆண்டில் மீன்பிடித் துறை அமைச்சராகவிருந்த ரஜித சேனாரத்னவே பெல் பொட்டிங்டர் நிறுவனத்தை ராஜபக்சவிற்காகப் பிரச்சாரம் செய்ய அமர்த்திக்கொள்கிறார். ராஜபக்ச ஐ.நாவில் ஆற்றிய உரையிலிருந்து பல்வேறு சம்பவங்களை பெல் பொட்டிங்கடரே திட்டமிட்டுக்கொடுத்தது. பெல் பொட்டிங்டர் நிறுவனத்துடன் நேரடியான தொடர்புகளைப் பேணியவர் ரஜித சேனாரத்னவே. இந்த நபர் இன்று ராஜபக்சவிற்கு எதிரணியின் முக்கிய புள்ளி. ராஜபக்ச

அரசிலிருந்து வெளியேறி ஜனாதிபதி வேட்பாளராகியுள்ள மைத்திரிபால சிரிசேனவின் நெருங்கிய சகாவாகியுள்ளார்.
ரஜபக்ச கும்பல் நடத்திய இனப்படுகொலையின் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இனப்படுகொலையை மூடி மறைத்தவர்களுள் மிகப்பிரதானமானவர். ரஜித சேனாரத்ன. ராஜபக்ச கொள்ளையிடும் பணம் முழுவதையும் குடும்பத்தோடு மட்டும் பகிர்ந்துகொள்வதாலேயே ரஜித போன்றவர்கள் விலகியோடுகிறார்களே தவிர தமிழ் ஊடகங்கள் சொல்வது போல எதிரணி ஜனநாயகத்தை மீளமைக்கும் என்பது பகற்கனவு.

போர்க்குற்றம், இனப்படுகொலை, நல்லிணக்கம், அரசியல் கைதிகள், சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமை, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் போன்ற எதனைப்பற்றியும் மூச்சுக்கூட விடாத எதிரணிப் பேரினவாதிகளும் ராஜபக்சவிற்கு இணையானவர்களே.

Exit mobile version