20.10.2008.
இந்து நாளேட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.
சிபிஐ தலைவர் படுகொலைக்கு கண்டனம்
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாள ராக செயல்பட்டு வந்த பா. ராஜேந்திரன் சமூக விரோதி களால் சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இப்படு கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மை யாக கண்டிப்பதோடு கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்து கிறது.
சமூக விரோதிகளால் நடைபெறும் இத்தகைய படுகொலைகள் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கதையாக உள்ளன. எனவே மாநில அரசு சமூக விரோதி களை ஒடுக்கிட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது.