பாஜக மூத்த தலைவரும் இந்து அடிப்படை வாதியுமான அத்வானி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ஜன் சேத்னா யாத்திரை என்னும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 11ம் தேதி பிகாரில் உள்ள சிதாப்தியாரா என்ற இடத்தில் இருந்து ரத யாத்திரையைத் துவங்கினார். அதை பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் துவக்கி வைத்தார்.
இந்த யாத்திரை மொத்தம் 38 நாட்கள் நடக்கிறது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300 கி.மீ. தூரம் பயணம் செய்யும் அத்வானி, 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் யாத்திரை மேற்கொள்கிறார்.
இந்தியாவைச் சீர்குலைத்து மக்களை சமூக அவலத்திற்ன் விழிம்பில் வைத்திருக்கும் இந்து தத்துவம் ஊழலின் அடிப்படைத் தத்துவமானக் கருதப்படுகிறது. அத்வானி அன்னா ஹசாரே ஆகியோரின் படம் காட்டும் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னர் ஊழல் பெருச்சாளிகளே ஒளிந்துள்ளனர்.
யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் இன்று மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் தமிழகத்தில் யாத்திரை மேற்கொள்கிறார். இன்று மதுரையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இன்றிரவு மதுரையில் ஓய்வு எடுக்கிறார்.
நாளை நெல்லை செல்கிறார். நெல்லைக்கு வரும் அத்வானிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு மாவட்ட பாஜகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மதியம் 2.30 மணிக்கு புளியங்குடியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், செங்கோட்டையில் பிரசாரம் செய்துவிட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.