Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திரா காந்தி குடும்பம் ஊழல் குடும்பம் என்பது வெளியானது

rajiv.gandhi1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்னைப் புறநகர்ப் பகுதியில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட இந்தியாவின் முன் நாள் பிரதமர் ரஜீவ் காந்தி போபர்ஸ் ஊழலில் ஈடுபட்டது அனைவரும் அறிந்தத்தே. இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள்களை ஆதாரம்காட்டி இந்திய செய்தி ஊடகங்கள் புதிய ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ராணுவத்திற்கு தேவைப்படும் அனைத்து ஆயுதங்களின் பேரத்திலும் ‘இந்திரா குடும்பம்’ தலையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்வீடனின் சாப் ஸ்கேனியா நிறுவனம் தனது விக்கென் போர் ஜெட் விமானத்தை இந்தியாவின் தலையில் கட்ட போராடி வந்தது. ஆனால் இந்த டீலில் ராஜீவ் காந்தியின் இடைத்தரகர் வேலை பயனளிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் நிறுவனமான SEPECAT-யிற்கு சென்றது.தற்போது வெளியாகியுள்ள கிசிங்கர் கேபிள்ஸ் படி 1974 முதல் 1976 வரை இந்தியாவில் நடந்த ஆயுத பேரங்களில் ‘குடும்பம்’ பெருமளவு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
எந்த ஒரு ஆயுத கொள்முதல் விவகாரத்திலும் ஆட்சியில் உள்ள இந்திய்ரா குடும்பத்தின் தாக்கம் இருப்பதாக ஸ்வீடன் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு திருமதி காந்தி தானே பேரத்தை முன்னின்று நடத்தியதாக மற்றொரு கேபிள் தெரிவித்துள்ளது.
இன்று வரை இந்திரா குடும்ப நிறுவனமாகத் தொழிற்படும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை அழிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்திருக்கிறது. பாரதிய ஜனதா போன்ற மத அடிப்படை வாத, பயங்கரவாதக் கட்சிகளை நோக்கி மக்கள் சிந்தனை திசைதிருப்பப்படுவதற்கும் காங்கிரஸ் கட்சியின் அளவுகடந்த ஊழலே காரணம்.

Exit mobile version