இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் டி.எம். ஜயரட்ண, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட எதிர்க்கட்சியினரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்திக்க உள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கையுடனான புதிய ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவே இப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதே வேளை, இரண்டு நாள்உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை சென்றிருக்கும் கட்டார் அமீர் ஷேக் ஹமட்பின் கலீபா அல் தானி மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டுபிரதிநிதிகளுக்கும் இடையில் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.